தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கி விட்டது. சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரோடு. சேலம், நாமக்கல் பகுதிகளில் வெயில் 100 டிகிரி செல்சியஸைச் தாண்டி சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்சியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெளியிலும், மழையும் காலநிலை மாறி மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் வளிமண்டல கிழடுக்கு திசை காற்றும், மேலடுக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று (மார்ச் 25) 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/