/tamil-ie/media/media_files/uploads/2020/11/image-85.jpg)
தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநில அரசின் பல்வேறு துறைகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக மாவட்டம் துவக்கப்பட்ட நாளான 28.11.2019-லிருந்து பதவியில் இருந்த எஸ். திவ்யதர்ஷினி, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே. ஜெயகாந்தன், மீன் வளர்ச்சி கழக இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ். கந்தசாமி, இ-சேவை, குறைதீர் அமைப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே. செந்தில் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக ஜெஸிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.