தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளான ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து 14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்துறை செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1. கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாங்கிட் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்படுள்ளார்.
2. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, காவலர் தேர்வு வாரிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. மாநில மனித உரிமை கூடுதல் டிஜிபியாக சி.கே.காந்திராஜன், டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர் வகித்து வந்த பதவியிலேயே டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்.
4. சேலம் புறநகர் ஏ.எஸ்.பி.யாக இருந்த சுஜித் குமார், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று, கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. ஓசூர் ஏ.எஸ்.பி.யாக இருந்த ரோகித் நாதன் ராஜகோபால், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சென்னை அடையாறு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. அடையாறு துணை கமிஷனர் சுந்தரவடிவேல், சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி தமிழ்செல்வன், காவலர் வீட்டுவசதி கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. காவலர் வீட்டு வசதி கூடுதல் டிஜிபியாக இருந்த விஜயகுமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. ஹோம் கார்ட் கூடுதல் டிஜிபி சுனில்குமார் சிங், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த வன்னியபெருமாள், கடலோர காவல் படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. எஸ்டாபிளிஸ்மெட் கூடுதல் டிஜிபியாக இருந்த கருணாசாகர், ஹோம் கார்ட் கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. காவல்துறை நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜிவ் குமார், காவலர் நலன் கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
13. காவலர் நலன் கூடுதல் டிஜிபியாக இருந்த பிரதீப் வி.பிலிப், சிவில் சப்ளை சிஐடி கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி வினித் தேவ் வான்கடே, காவல்துறை நவீனமயமாக்கல் துறை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.