தீத்திப்பாளையம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் நியாய விலை கடையை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம். தீத்திபாளையம் பகுதியில் நேற்று இரவு வந்த யானை கூட்டம் அங்குள்ள விளைநிலங்களையும் ரேஷன் கடையையும் சேதப்படுத்தி சென்றுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் தீத்திபாளையம் ஊருக்குள் நேற்று இரவு 14-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள வாழை மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் தக்காளிக்காக வைக்கப்பட்டுள்ள டிப்பர்களை சேதப்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். அதனிடையே அந்த காட்டு யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை சேதப்படுத்தி ரேஷன் பொருட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
அப்பகுதியில் இரண்டு மூன்று யானைகள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்து பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்தி உள்ளதால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
எனவே வனத்துறை வருவாய்த்துறை ஆகியவை இணைந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து யானைகளை அடர் வனபகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“