தஞ்சை அருகே சோழ மன்னர்களுள் ஒருவரான கரிகால் சோழனின் குஷ்ட நோயைத் தீர்த்த பெருமையுடைய 1400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயில் குளத்தை தூர் வாரியபோது சுடுண்ணாலான 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Advertisment
தஞ்சையை அடுத்துள்ள கரந்தையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் ஆலயம் சோழ மன்னர்களுள் ஒருவரான கரிகால் சோழனின் கருங்குஷ்ட நோய் தீர்த்த தலமாகவும்இ திருநாவுக்கரசர் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்குகிறது.
மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இக்குளம் காலப்போக்கில் நீர் வரத்து இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வறண்டு காணப்பட்டது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீர்வழிப்பாதை கொண்டு வரப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரப்பட்டு குளக்கரையில் பல லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தூர் வாரியபோது அப்பகுதியில் சுடுமண்ணாலான உறை கிணறுகள் இருப்பது கண்டறிப்பட்டது. இதுவரை 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை கிணறுகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த செல்வபெருமாள் என்ற சிவனடியார் கூறினார்.
தலா அரை அடி உயரம் மற்றும் 3 அடி விட்டம் கொண்ட இந்த ஏழு உறை கிணறுகளும் தற்போது ஊறி வந்து கொண்டிருக்கின்றன. இக் குளத்திற்கு கருங் குட்டம் (குஷ்டம்) தீர்;த்த குளம் என்று பெயர். அதற்குச் சான்றாக இக் குளத்தில் தற்போது தீர்த்தங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார் சிவனடியார் செல்வபெருமாள்.
இந்த உறை கிணறுகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.