சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 60 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை மொத்தம் 141-ஐ எட்டியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் மாநில அரசாங்கம், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், ஏற்கெனவே 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 90% பேருக்கு ஒமிக்ரான்அறிகுறிகள் இருப்பதாகவும்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் தொற்று இல்லாத மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணாஸ் ஸ்டோர்ஸ் ஊழியர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்ததில், இன்று சுமார் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியன் பேரில், தற்போது குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எம்.ஐ.டி கல்லூரியில், கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால், தாம்பரம் மாநகராட்சி’ சுகாதாரத் துறை பணியாளா்கள், விடுதியில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், விடுதிக்கு அருகில் கடைகளில் பணிபுரியும் தொழிலார்களிடம் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“