திருவள்ளுரில் 14ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

திருவள்ளுரில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை 14ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளுரில் 14ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் அருகே சிட்லப்பாக்கம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்காக நிலம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. அப்போது இரண்டரை அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் புத்தர் சிலையை கைப்பற்றி தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

இந்தச் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் சிலை 14ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனத் தெரிவித்தனர். இந்தச் சிலையில் பீடத்தின் மேல் புத்தர் கண்களை மூடியவாறு தவக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 14th century buddha statue discovered in tiruvallur