Tamilnadu Weather news Tamil: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாள்களுக்குக் கன மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாள்களில், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:15 districts receive heavy rainfall tamilnadu weather report tamil news
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை