நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கம் வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இவர்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி திங்கள்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல் பதக்கங்களை வழங்குகிறார்.
அந்த வகையில் தன்னலமற்ற சேவை மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு பதக்கத்தை 5 பேர் பெறுகின்றனர்.
அவர்கள்,
- பிரேம் ஆனந்த் சின்ஹா (சென்னை தெற்கு கூடுதல் ஆணையர்
- கே. அம்பேத்கர் (கடலூர் சிஐடி சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்)
- எஸ். சிவராமன் (சென்னை சிட்டி போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்)
- வி. பழனியாண்டி (சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதுரை)
- எம். குமார் (போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாம்பரம்)
இதேபோல் குற்ற விசாரணையில் சிறப்பாக ஈடுபட்ட 10 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்குகிறார். அவர்கள்,
- ஜி. ஸ்டாலின் (மதுரை துணை ஆணையர்)
- எஸ். கிருஷ்ணன் (சேலம் சிட்டி குற்ற பிரிவு சிஐடி)
- எம். பிருந்தா (விழுப்புரம் போலீஸ் மாவட்ட காவல் ஆய்வாளர்)
- ஏ. பிரபா (நாமக்கல் சிபிசிஐடி ஆய்வாளர்)
- வி. ஸ்ரீநிவாசன் (சென்னை தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர்)
- எம். சுமதி (திண்டுக்கல் மாவட்ட காவல் ஆய்வாளர்)
- சி. நாகலெட்சுமி (நாகப்பட்டினம் மாவட்ட காவல் ஆய்வாளர்)
- வி. துளசி தாஸ் (சென்னை மாநகர காவல் உதவி ஆய்வாளர்)
- எல். பார்த் சாரதி (சென்னை போலீஸ் சிபிசிஐடி காவல் உதவி ஆய்வாளர்)
- கே. இளையராஜா (சென்னை மாநகர காவல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர்)
இந்த 15 காவல் அதிகாரிகளுக்கும் 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.