15 trains get additional coaches to avoid pongal rush: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க, 15 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கூடுதல் பெட்டிகள் பெறும் ரயில்களின் விவரங்கள்
கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் சேர்க்கப்படும் ரயில்கள்
- ரயில் எண் 16865 சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் இடையே ஜனவரி 13 முதல் 16 வரை,
- ரயில் எண் 22657 தாம்பரம்-நாகர்கோவில் ஜனவரி 16ஆம் தேதி
- ரயில் எண் 22658 நாகர்கோவில் -தாம்பரம் ஜனவரி 13 மற்றும் 16ஆம் தேதி,
- ரயில் எண் 12601 சென்னை சென்ட்ரல் – மங்களூர் ஜனவரி 16ஆம் தேதி வரை
- ரயில் எண் 22637 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-மங்களூர் சென்ட்ரல் ஜனவரி 16ஆம் தேதி வரை,
- ரயில் எண் 12695 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனவரி 16 வரை,
- ரயில் எண் 12696 திருவனந்தபுரம் சென்ட்ரல்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஜனவரி 13 முதல் 17 வரை
- ரயில் எண் 22640 ஆலப்புழா-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஜனவரி 13 முதல் 17 வரை
- ரயில் எண் 22639 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் -ஆலப்புழா ஜனவரி 16 வரை.
கூடுதலாக ஒரு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டி சேர்க்கப்படும் ரயில்கள்
- ரயில் எண் 16127 சென்னை எழும்பூர்-குருவாயூர் ஜனவரி 16 வரை,
- ரயில் எண் 16128 குருவாயூர்-சென்னை எழும்பூர் ஜனவரி 13 முதல் 17 வரை,
- ரயில் எண் 16616 கோவை -மன்னார்குடி ஜனவரி 14ஆம் தேதி
இது தவிர ரயில் எண் 16616 கோவை.-மன்னார்குடிக்கு ஜனவரி 13ம் தேதியும், ரயில் எண்.16615 மன்னார்குடி-கோயம்புத்தூருக்கு ஜனவரி 13ம் தேதியும் ஒரு ஸ்லீப்பர் கோச் மற்றும் ஒரு ஜெனரல் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும். அதே நேரம் ஜனவரி 14 ஆம் தேதி ரயில் எண் 16615 மன்னார்குடி-கோவை ரயில் இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil