பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்க்க 15 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க, 15 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது

15 trains get additional coaches to avoid pongal rush: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க, 15 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

கூடுதல் பெட்டிகள் பெறும் ரயில்களின் விவரங்கள்

கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் சேர்க்கப்படும் ரயில்கள்

 1. ரயில் எண் 16865 சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் இடையே ஜனவரி 13 முதல் 16 வரை,
 2. ரயில் எண் 22657 தாம்பரம்-நாகர்கோவில் ஜனவரி 16ஆம் தேதி
 3. ரயில் எண் 22658 நாகர்கோவில் -தாம்பரம் ஜனவரி 13 மற்றும் 16ஆம் தேதி,
 4. ரயில் எண் 12601 சென்னை சென்ட்ரல் – மங்களூர் ஜனவரி 16ஆம் தேதி வரை
 5. ரயில் எண் 22637 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-மங்களூர் சென்ட்ரல் ஜனவரி 16ஆம் தேதி வரை,
 6. ரயில் எண் 12695 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனவரி 16 வரை,
 7. ரயில் எண் 12696 திருவனந்தபுரம் சென்ட்ரல்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஜனவரி 13 முதல் 17 வரை
 8. ரயில் எண் 22640 ஆலப்புழா-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஜனவரி 13 முதல் 17 வரை
 9. ரயில் எண் 22639 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் -ஆலப்புழா ஜனவரி 16 வரை.

கூடுதலாக ஒரு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டி சேர்க்கப்படும் ரயில்கள்

 1. ரயில் எண் 16127 சென்னை எழும்பூர்-குருவாயூர் ஜனவரி 16 வரை,
 2. ரயில் எண் 16128 குருவாயூர்-சென்னை எழும்பூர் ஜனவரி 13 முதல் 17 வரை,
 3. ரயில் எண் 16616 கோவை -மன்னார்குடி ஜனவரி 14ஆம் தேதி

இது தவிர ரயில் எண் 16616 கோவை.-மன்னார்குடிக்கு ஜனவரி 13ம் தேதியும், ரயில் எண்.16615 மன்னார்குடி-கோயம்புத்தூருக்கு ஜனவரி 13ம் தேதியும் ஒரு ஸ்லீப்பர் கோச் மற்றும் ஒரு ஜெனரல் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும். அதே நேரம் ஜனவரி 14 ஆம் தேதி ரயில் எண் 16615 மன்னார்குடி-கோவை ரயில் இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 15 trains get additional coaches to avoid pongal rush

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express