scorecardresearch

காணும் பொங்கல்: மெரினாவில் உச்சகட்ட பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்: மெரினாவில் உச்சகட்ட பாதுகாப்பு

நாளை காணும் பொங்கல் பண்டிகையை அடுத்து சென்னையில் 15,000 காவலர்கள் கொண்ட சிறப்பு பாதுகாப்புப் படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் காவல் ஆளுநர் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதேபோல, சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதில் நான்கு தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட உள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சிறப்பு வாகன தணிக்கை குழு மற்றும் 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல்துறை செய்துள்ளது.

கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகளுக்குக் காவல் அடையாள அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மெரினா கடற்கரையில் நான்கு டிரோன் கேமராக்களும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இரண்டு டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு குற்ற நிகழ்வுகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 15000 special police arranged in chennai for kaanum pongal

Best of Express