இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய நிலையில், ஆந்திராவின் ஆளும் கட்சி அதை மறுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறியது. பிஜு ஜனதா தளம் இந்த அழைப்பு பற்றிய கேள்விகளை புறக்கணித்தது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சமூக நீதிக்கான மாநாடு நடத்துகிறார். இதில் பா.ஜ.க அல்லாத பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தி.மு.க நடத்தும் சமூகநீதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களில் பிஜு ஜனதா தளம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி) ஆகியவை இதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு வெளியே இருக்க முடிவு செய்துள்ளன என்று வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
ஆனால், ஒய்.எஸ்.ஆர்.சி.பி தனக்கு அழைப்பு வரவில்லை என்றும், நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறியது. பிஜு ஜனதா தளம் கட்சி பங்கேற்குமா என்பது பற்றி கூறவில்லை. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் கட்சிகள், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நெருக்கமாக இருக்க விரும்புவதாகவும், தேசிய அளவில் பா.ஜ.க-வை வருத்தப்பட வைப்பதைத் தவிர்க்கவும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட முறையில் வாதிட்டன.
இந்த அழைப்புகள் ஒரே நேரத்தில், நெருக்கமான உறவுகளை உருவாக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையின் விளைவு என்று மாநாட்டில் கலந்துகொள்ளும் ஒரு கட்சியின் தலைவர் கூறினார். பிஜு ஜனதா தளா சார்பில் அக்கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடாவான சஸ்மித் பத்ரா பங்கேற்பார் என்றார்.
பத்ராவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, பிஜு ஜனதா தளம் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார். “எனது பங்கேற்பு குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை” என்று கூறினார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியினர் யாரும் தி.மு.க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த மாநாட்டின் கருப்பொருள் “இந்தியாவில் சமூக நீதியை முன்னோக்கி கொண்டு செல்வது”, இதில் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். ஜனவரி மாதம் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் இந்த கூட்டத்தில் மற்ற கட்சிகளின் தலைவர்களும் பேச இடம் அளிக்கப்படும்.
காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி), திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி), சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி), ஒய்.எஸ்.ஆர்.சி.பி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை தி.மு.க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக தி.மு.க வட்டாரம் தெரிவித்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி, பாரத ராஷ்டிர சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐ - எம்.), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி, ஆம் ஆத்மி கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மற்றும் மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) உள்ளிட்டக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்க்ள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.எம்.எம் சார்பில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்.ஜே.டி சார்பில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடந்த சில நாட்களாகக் காட்டப்படும் நட்பு நீடிக்குமானால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஒரு வடிவமாக உருவெடுக்கும். ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஏதாவது ஒரு பிரச்சினையில் முன்னிலை வகிக்கலாம். சமூகநீதி விஷயத்தில், இது இயல்பாகவே தி.மு.க-வின் களம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
ஒடிசா முதல்வர் மற்றும் பிஜு தனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் மீது பா.ஜ.க மாநிலத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் சூடுபிடித்திருக்கும் நேரத்தில், அரசியல் களத்தில் தனது நிலைப்பாட்டில் உள்ள தனது தெளிவின்மையை களைய பிஜு ஜனதா தளம் முடிவு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பட்நாயக் சந்தித்தார்.
திங்களன்று மாவட்ட மறுஆய்வுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கவிருப்பதால், கலப்பு முறையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று ஒரு டி.எம்.சி தலைவர் கூறினார். அக்கட்சியின் ராஜ்யசபா தளத் தலைவர் டெரெக் ஓ பிரையன் அதன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.எம். நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கான முழக்கத்தில் சேரவில்லை, மாறாக அக்கட்சி உச்ச நீதிமன்ற கண்காணிப்பு விசாரணைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் போராட்டங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் டி.எம்.சி இணைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை 14 எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் இ.டி போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை குறிவைத்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை ஏப்ரல் 5-ம் தேதி விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. பி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி, டி.எம்.சி, ஜே.எம்.எம், ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி, எஸ்.பி, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), என்.சி.பி, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, தி.மு.க ஆகிய கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.