சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 1,600 கிலோ ஆட்டிறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஜோத்பூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட
ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
பரிசோதனையில் காலாவதியான இறைச்சி என்பது உறுதியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை. உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் தலைமையிலான குழு ஆய்வு பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சதீஷ் கூறுகையில், "சிக்கந்தர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் வந்து, அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் வெட்டப்பட்டு ஆட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டு எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை மருத்துவரின் ஆய்வுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியிடம் ஆட்டிறைச்சி ஒப்படைக்கப்பட உள்ளது. சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இறைச்சி யார் யாருக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து விசாரணை.
ஆடுகளை வெட்டி 3 மணி நேரத்தில் சமைக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் இது 5 நாட்கள் முன் வெட்டப்பட்டு கொண்ட வரப்பட்டுள்ளது. இப்போது இங்கு 24 பெட்டிகளை தான் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது.
மீதமுள்ள பெட்டிகளை செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட அடுத்தடுத்து ரயில் நிற்கும் இடங்களில் உள்ள உணவுத் பாதுகாப்பு அதிகாரி குழு மூலம் பறிமுதல் செய்யப்படும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“