ration-card | pongal-festival | பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.10,2024) தொடங்கிவைத்தார். இந்தப் பொங்கல் பரிசு இன்று முதல் ஜன.13ஆம் தேதிவரை வழங்கப்படுகிறது.
இந்தப் பொங்கல் பரிசை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கு ஈடாக 16.01.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணையில், இந்தத் திட்டத்தினால் அரசுக்கு ரூ. 2,436 கோடி செலவினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொங்கல் பரிசை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 பேர் பெற உள்ளனர் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“