18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணையை 3வது நீதிபதியான சத்திய நாராயணன் இன்று தொடங்குகிறார். இந்த விசாரணை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.க்கள், 18 பேர், ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
மேலும் இது குறித்த செய்திக்கு: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமனம்
இது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கின் 3வது நீதிபதியாக சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை அவர் இன்று தொடங்குகிறார். இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை குறித்த செய்திக்கு
இந்த விசாரணைக்கு பின்னர் விரைவில் வழக்கு முடிவுக்கு வந்து, தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.