18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்த நிலையில், தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வரும் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மீண்டும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன. அன்று மாலையே, அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.

மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றவேண்டும் எனவும், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது எனவும், முதல்வருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், கட்சி தலைமைக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவறு, தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யமால், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த மனுவின் மீது நடைபெற்று வந்த விசாரணையானது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று இவ்வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

×Close
×Close