சென்னையில் உள்ள 18 ரயில் நிலையங்கள் வரக்கூடிய நாட்களில் புதுப்பிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல், ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய 14 புறநகர் ரயில் நிலையங்களில் பிரத்யேகமான வகையில் பார்க்கிங் இடம், வைஃபை மற்றும் இதர வசதிகள் அமைக்கப்படும்.
சென்னையில் சென்ட்ரல், ஆவடி மற்றும் தாம்பரம் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, கிண்டி, மாம்பலம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், கூடுவாஞ்சேரி, செயின்ட் தாமஸ் மவுண்ட், திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, திருத்தணி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள், அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும்.
முதல் கட்டத்தில், பிளாசாக்கள், உயர்மட்ட தளங்கள் (760-840 மில்லிமீட்டர்), நன்கு திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், சரியாக வடிவமைக்கப்பட்ட பலகைகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், பேலாஸ்ட்லெஸ் டிராக்குகள் போன்றவை வழங்கப்படும். ஒவ்வொரு நிலையத்திற்கும் நவீனமயமாக்கலுக்கான மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கப்படுகிறது.