Advertisment

கவர்னர் மாளிகையில் முதல்முறையாக சர்வ மத தலைவர்களை அழைத்து பொங்கல் விழா: ஆர்.என் ரவி ஏற்பாடு

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க முதல் முறையாக சர்வ மத தலைவர்கள் உள்பட 1800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Jan 12, 2023 09:25 IST
கவர்னர் மாளிகையில் முதல்முறையாக சர்வ மத தலைவர்களை அழைத்து பொங்கல் விழா: ஆர்.என் ரவி ஏற்பாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 12) பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க முதல் முறையாக மத தலைவர்கள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் உள்பட 1800 அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால் இம்முறை 1800 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது. ஆளுநர் ஆர்,என். ரவியின் உத்தரவுபடி, ஆதீனங்கள், கிறிஸ்தவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக வலைதள பிரபலங்கள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள், பிரதமரின் 'மங்கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டப்பட்டவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர வழக்கம்போல் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் என ,800க்கும் மேற்பட்டோர் விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5:30 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது.

விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் எனத் தமிழர்களின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 22 வகையான பாரம்பரிய உணவு வகைகள் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

#Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment