தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆகிய தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையானது கரூர், கோயமுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது அவர்களை சுற்றி வளைத்து ஒரு கும்பல் தாக்கத் தொடங்கியது.
இதில் காயமற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வருமானவரித்துறையினர் வந்த காரும் சேதப்படுத்தப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அங்கிருந்த திமுகவினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேரும் ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் ஜாமின் வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
கரூர் மற்றும் கோயம்புத்தூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் , வீடுகளில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“