New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Express-Image-15.jpg)
தாம்பரம் அருகில் இரும்புலியூரில், தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
சென்னை தாம்பரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி, ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் இருக்கின்ற மெட்ராஸ் கிருஸ்துவ கல்லூரியில், கேரள மாநிலத்தை சேர்ந்த நிகிதா (வயது 19) என்ற மாணவி, உளவியல்(சைக்காலஜி) இளங்கலை படித்து வந்தார்.
இன்று, தாம்பரம் அருகில் இரும்புலியூரில், தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
நிகிதா உளவியல் (சைக்காலஜி) படித்து வந்தாலும், இரும்புலியூரில் இருக்கின்ற சிறுவர் மனநல பள்ளியில் பகுதிநேரமாக ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
இன்று பள்ளியில் பணியாற்ற வரும்பொழுது, அவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் வந்து இரும்புலியூர் பகுதியில் இறங்கி, அங்கிருந்து தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இவர் இரும்புலியூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் பொழுது, தனது நண்பருடன் தண்டவாளத்தில் பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தனது நண்பர் ரயில் சென்றவுடன் கடக்க அறிவுறுத்தியும், கேட்காமல் கடக்க முயற்சி செய்த மாணவி, குருவாயூர் எஸ்பிரஸில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காலை 9.30 மணி அளவில் நடந்த இந்த துயர சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.