பாகிஸ்தானை சேர்ந்த ஆயிஷா ராஷன், இந்தியர் ஒருவரின் இதயம் தானம் மூலம் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஆயிஷா ராஷன். இந்நிலையில் அவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் 2014ம் ஆண்டில் அவர் இந்தியா வந்து, இதயம் செயலிழப்பை தவிர்க்க சிகிச்சை மேற்கொண்டார். மேலும் அவருக்கு கருவியின் உதவியால் இதயம் இயங்கி வந்தது. அதில் சிக்கல் ஏற்படவே, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் அதற்னாக வசதிகள் இல்லை என்பதால், இந்தியாவில் சிகிச்சை பெற முடிவு செய்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார். இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அவருக்கு ரூ. 35 லட்சம் தேவைபட்டது. இந்நிலையில் அவரிடம் பண வசதி இல்லாததால், அறகட்டளை மூலம் அவருக்கு தேவையான பணத்தை தனியார் மருத்துவமனை ஏற்பாடு செய்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயிஷா ராஷனுக்கு டெல்லியில் இருந்து இதய தானம் கிடைத்தது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவசமாக இதய் மாற்று அறுவகை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பேசுகையில் “ நாங்கள் அவரை பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்று பார்க்கவில்லை, எங்களுக்கு அனைவரும் நோயாளிகள்தான், அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்தியா அரசிற்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.