காதலர் தினம் 2019 : காதலர் தினம் என்றாலே சாக்லேட்டுகள், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகள், டின்னர் டேட்டுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் நகரம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்ற நிலையில், விவசாயிகளும் இந்த வேலன்டைன்ஸ் டேக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.
காதலர் தினம் 2019 – 2.5 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒசூரில் இருந்து மட்டும் சுமார் 2.5 கோடி ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 1 கோடி மலர்கள் அதிகமாக இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் விளையும் ரோஜா மலர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், மலேசியா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் காதலர் தினம் அன்று ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
2000 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச்சின் விலை ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 50 வரை விலை போகும். காதலர் தினத்தன்று மட்டும் ஒரு பஞ்ச்சின் விலை ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த காதல் பாடல்கள்