ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் வனச்சரகர் சிதம்பரநாதன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாதையன் (வீரப்பனின் மூத்த சகோதரர்), ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வீரப்பனின் அண்ணன் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். வயது மூப்பு, உடல் நலக் குறைவு காரணமாக மாதையன் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
மாதையன் உயிரிழந்த நிலையில், ஆண்டியப்பன் மற்றும் பெருமாளை விடுதலை செய்யக் கோரி
மனித உரிமை ஆர்வலர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 32
ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு ஆண்டியப்பன் மற்றும் பெருமாளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டதாக போலீசார் நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.
இருவரும் நேற்று அதிகாலை கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக போலீசார்
தெரிவித்தனர்.சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil