Ttv Dhinakaran | Lok Sabha | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளது; ஆனால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே நிர்வாகிகள் விரும்புகின்றனர்” என்றார்.
2024 மக்களவை தேர்தலில் அ.ம.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அ.ம.மு.க மற்றும் பா.ஜ.க இடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த வகையில் அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளிலும அ.ம.மு.க குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து பேசிய டி.டி.வி தினகரன், “பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு அணில் போல் செயல்படுவோம்.
நாங்கள் அதிகம் சீட்கள் கோரி அழுத்தம் கொடுக்கவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.
மேலும், “தமக்கு டெல்டா தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளது; ஆனால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே நிர்வாகிகள் விரும்புகின்றனர்” என்றார்.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“