நாட்டின் 5 முக்கிய இடங்களில், மக்கள் பாராளுமன்றம் (people's Parliament Jan sarokar) அமைப்பின் சார்பில் மக்கள் ஒற்றுமை மற்றும் உரிமைத் திருவிழா நடைபெறுகிறது.
இதன் முதல் நிகழ்ச்சி இன்று (மார்ச் 21) காலை தேச பிதா அண்ணல் காந்தியின் நினைவு மண்டபம் முன்பு தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில். சமூக நல்லிணக்க விழா, மீன் உணவு திருவிழாவாக தொடங்கியது.
காலை முதல் மாலை வரை நடக்கும் இவ்விழா கருத்தரங்கில் பல்வேறு சமய மதக்குருக்கள், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பன்முகத் தன்மை ஆற்றலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் நாள் விழா (மார்ச் 22) கடலோர மக்கள் பிரச்சனைகள் மற்றும் ஒன்றிய அரசின் புதிய கொள்கைகள் பற்றி மீனவர்கள் குடியிருப்பு கிராமமான வாணியகுடியில் நடக்கிறது.
தொடர்ந்து, நாகர்கோவிலில் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில், அரசியல் சாசன ஜனநாயகம் மாநில மத்திய அரசுகளின் உறவுகள், பெண்கள் வளர்ச்சி மற்றும் விவசாயக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை மற்றும் தமிழ் நாட்டின் தேவை ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
முன்னதாக இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அருணா ராய், “இதன் முதல் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடப்பது பெருமையான விஷயம்” என்றார்.
அப்போது, பிராங்கோ தாமஸ் (முன்னாள் அனைத்து இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்களின் தலைவர்) உடனிருந்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/