‘2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’ – புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடு

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஜனவரி 10 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. வைரல் பரவலை தடுத்திட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நாளிலும் சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஜனவரி 10 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின்படி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல் தற்காலிக நிறுத்தப்படுவதாகவும், பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும்.

மேலும், ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடினாலும், ரயிலில் பயணம் செய்தாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 2 dose of vaccination is must for travel in chennai trains

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express