scorecardresearch

மதுரை: செமினாருக்கு வந்த குஜராத் மாணவி கற்பழிப்பு; 2 பேர் கைது

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

express news
குஜராத்தில் தலித் இளைஞரை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு

கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவரை, தமிழகத்தின் மதுரை காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் (வயது 22) மற்றும் அவரது நண்பர் ஜெரோம் கதிரவன் (வயது 23) என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். 2022 டிசம்பரில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அகமதாபாத்தைச் சேர்ந்த பெண், பட்டயக் கணக்கியல் (சிஏ) படிப்பைத் தொடர்ந்து, செமினாரில் பங்கேற்பதற்காக டிசம்பர் 16 அன்று மதுரை வந்தடைந்தார்.

அங்கு தங்கியிருந்தபோது அப்பெண் நோய்வாய்ப்பட்டதாகவும், தனக்கு முன்பே தெரிந்த ஆஷிஷ் உதவியை நாடியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆஷிஷ் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடக்கவிருந்த செமினாரில் பங்கேற்க மதுரை வந்து அதே லாட்ஜில் தங்கியிருந்தார்.

மருந்து மற்றும் உணவு கொண்டு வர கதிரவனின் உதவியை ஆஷிஷ் நாடினார். பின்னர் இருவரும் அந்த பெண்ணை லாட்ஜில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியேறியதாக போலீசார் தெரிவித்தனர்.

வீடு திரும்பிய அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி குஜராத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் மதுரை ஸ்டேஷனுக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 2 held in madurai for sexually assaulting gujarat woman

Best of Express