Advertisment

தீபாவளி புதுவரவு: 2 புதிய ரக பீர்கள் அறிமுகம்

தற்போது டாஸ்மாக்கிற்கு புதிதாக 2 பீர் மதுபானம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர்கள் அறிமுகமாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
Tasmac, Alcohol, 2 persons arrested for making wine at home with the help of youtube

2022 தீபாவளியின்போது, ரூ.464 கோடிக்கு மது விற்பனையானது.

tasmac | தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் பல நூறு கோடிகள் வருமானம் வருகின்றன
தீபாவளியை பொறுத்தமட்டில் 2021ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடந்தது. அடுத்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்து ரூ.464 கோடியாக உயர்ந்தது.

Advertisment

மேலும் இதனை இலக்காக வைத்து ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் முக்கிய பண்டிகை தினங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும்.
இந்த நிலையில் தற்போது டாஸ்மாக்கிற்கு புதிதாக 2 பீர் மதுபானம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர் பாட்டில்கள் நேற்று முன்தினம் முதல் அறிமுகமாகி உள்ளன.

இதன் விலை ரூ.160 ஆகும். இந்த நிலையில் வரும டிசம்பர் மாதத்துக்குள் 5 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனால் தீபாவளிக்கு மது பானங்களின் விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் பீர் ரகங்களுக்கு கடும் கிராக்கியும், தட்டுப்பாடும் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஓ.எம். என்ற நிறுவனத்துக்கு பீர் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் மது ஆலையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment