New Update
00:00
/ 00:00
பாபு ராஜேந்திரன் கடலூர்
சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த தீட்சிதர் உள்ளிட்ட இருவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் சரகம் மீதிகுடி கோவிலாம் பூண்டி இடையே சாலையோரம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்கள் மூட்டையாக கிடந்துள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிதம்பரம் நகர போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையில் போலீசார் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் தீட்சிதர் (37), மீதிகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன் (48) ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்கள் மதிப்பெண் போலிச் சான்றிதழ்களை பாண்டிச்சேரி பகுதியில் ஒரு இடத்தில் ரகசியமாக தயார் செய்துள்ளனர்.
இப்படி தயார் செய்த சான்றிதழ்களை பல்வேறு நபர்கள் மூலம் மாணவர்களுக்கு வினியோகம் செய்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக சிதம்பரம் நகர போலீசார் பாண்டிச்சேரிக்கு சான்றிதழ் தயார் செய்த இடத்திற்கு போலீஸ் படையுடன் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.