/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-74.jpg)
முதல்வர்
முதல்வர் பழனிசாமி :
நேற்றைய சுதந்திர தினக் கொண்டாடத்தில் தமிழக மக்கள் கொடுத்த வரவேற்பை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
72 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று (15.8.18) விமர்சியாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் கொடியேற்றினார். விழாவை முடித்துக் கொண்டு கே.கே நகரில் உள்ள கோயிலுக்கு சென்றார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது விருந்தில் கலந்துக் கொண்டு மக்களுடன் உணவு அருந்தினார். பழனிசாமி கோயிலுக்கு செல்லும் வழியில் அவரைக் காண பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்தனர். இதைப்பார்த்த முதல்வர் காரிலிருந்து கீழே இறங்கினார்.
சுதந்திர திருநாளையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, சென்னை கே.கே நகர் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற, சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.. #சுதந்திரதினம்#IndependenceDayIndiapic.twitter.com/tEuhhUCzIh
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 15 August 2018
பின்பு, சாலையின் வழியே நடந்தே சென்றார். இதைப் பார்த்த கூட்டத்தில் இருந்த 2 வயது சிறுமி ஒருவர் முதல்வருக்கு கைக் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத முதல்வர், பதிலுக்கு கைக்கொடுத்து சிறுமியின் கன்னத்தில் கிள்ளினார்.
சுதந்திர திருநாளையொட்டி, இன்று சென்னை கே.கே நகர் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற, சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் கலந்து கொள்ள, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. pic.twitter.com/ZqG8YwoCvS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 15 August 2018
இதை அங்கிருந்த புகைப்பட் கலைஞர் ஃபோட்டோ எடுத்தார். இந்த சம்பவத்தை மறக்காத முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்த புகைப்படத்தை நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us