By: WebDesk
Updated: October 29, 2018, 03:39:23 PM
Election 2019 Tamil nadu
இடைத்தேர்தலையொட்டி 20 தொகுதிகளுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்களின் பெயரை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் :
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படத் தொடங்கி விட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், இந்த 20 தொகுதிகளுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் , கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், நிர்வாகிகள் நியமனம், 18 எம் எல் ஏக்கள் வழக்கு குறித்து கலந்து யோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டத
இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்னர்.
திருப்பரங்குன்றம்- அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்பட 7 பேர் பொறுபாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் கீழ்கண்டவாறு கழக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.