இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழ்நாட்டிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (டிசம்பர் 3 மற்றும் 4) வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மாநிலத்தின் மீதமுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், நாகப்பட்டினம், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுவருகிறது.
மேலும், புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திராவின் கடலோரப் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அடுத்த 12 மணி நேரத்திற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள வட தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வட தமிழக கடலோரம் மற்றும் புதுவையில் 20 செ.மீ-க்கு மேல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“