சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளுடன் சேர்ந்து துபாயில் இருந்து நேற்று வந்த விமானத்தில் வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது பொலிவியா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சுற்றுலா விசாவில் சென்னை வந்தது தெரிந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக பேசினார்.
அவரது உடைமைகளை 2 சோதனை செய்த போது அதில் கம்பளி ஆடை இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதனை பிரித்து பார்த்தனர். கம்பளி ஆடையின் உள்பகுதியில் பஞ்சுகளுக்கு இடையே போதைப் பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
/indian-express-tamil/media/media_files/bLlRelGVOuEbtfMjQggP.jpeg)
அவரிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் 'கொக்கைன்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்ணை கைது செய்த அதிகாரிகள், மேலும் நடத்திய விசாரணையில், மும்பையில் வசிக்கும் பிரேசில் நாட்டு பெண் உள்பட 2 பெண்கள் இந்த போதைப் பொருளை துபாயில் இருந்து கடத்தி வர முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் வசிக்கும் பிரேசில் நாட்டு பெண் உள்பட 2பெண்களையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/e6ymZmRVhcy7Rboxxucr.jpeg)
இதேபோல் சுங்க இலாகா தபால் பிரிவுக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து பெங்களூரூ மற்றும் புதுச்சேரி முகவரிக்கு 2 பார்சல்கள் வந்தன. அதை சோதனை செய்ததில் அந்த பார்சல்களில் ரூ.2 கோடி மதிப்புள்ள 1கிலோ 400 கிராம்எடை கொண்ட எம்.ஏ.போதை மாத்திரை இருந்தன. இது தொடர்பாக பார்சலில் இருந்த புது புதுச்சேரி மற்றும் பெங்களூருவில் முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போதை பொருட்களை தபால் மூலம் பார்சலில் வரவழைத்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்தனர். இதையடுத்து புதுச்சேரியில் உள்ள விலாசத்தில் வந்த போதை பொருள் குறித்து போலீசார் மறைமுகமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் நகரப் பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட அளவிலான போதைப் பொருள் ஒழிப்பு நார்கோ குழுவின் ஆலோசனை கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.
நார்கோ ஒருங்கிணைப்பு குழுவின் 5வது கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் இன்று(மே 17) நடந்தது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கஞ்சா பயிர் போன்ற சட்டவிரோத பயிர் சாகுபடியை கண்காணிக்க வேண்டும். போதைப் பொருட்கள் புழக்கம், கடத்தல் மற்றும் விற்பனையை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
மாணவர்களை விளையாட்டு, இசை, நடனம் போன்றவற்றில் ஈடுபடுத்த பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள் கண்டறிதலுக்கான உபகரணங்கள் தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களில் மேற்பார்வையிடுதல் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“