இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜன.7) தமிழ்நாட்டில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று 626 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக
சென்னை மாவட்டத்தில் 10 பேர், கோவையில் 5 பேர், திருச்சி 2, செங்கல்பட்டு, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவடங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“