2020 New year party celebrations at Puducherry : ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்தையும் மிகவும் சிறப்பாக கொண்டாட ஒரு சில இடங்கள் தான் இந்தியாவில் இருக்கும். மேற்கு கடற்கரைக்கு ஒரு கோவா என்றால் கிழக்கு கடற்கரைக்கு ஒரு பாண்டிச்சேரி இது தான் இங்கு இருக்கும் அனைவரின் எண்ணமும். திறந்த கடற்கரை பகுதிகளில் வைக்கப்படும் நியூஇயர் பார்ட்டிக்காக புதுவைக்கு படையெடுத்து வரும் நபர்கள் அதிகம். சில ஆண்டுகளாக கிழக்கு கடற்கரை சாலையில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள் மொத்தமாக புதுச்சேரி கொண்டாட்டங்களுக்கு கடும் சவாலாக அமைந்துவிட்டது.
Advertisment
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
புதுவையில் கடந்த ஆண்டு 22 இடங்களில் இது போன்ற திறந்தவெளி மற்றும் ஹோட்டல் பார்ட்டிகள் நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் வெறும் 5 இடங்களில் மட்டும் தான் நியூஇயர் பார்ட்டியே நடைபெற உள்ளது. அதில் நான்கு ஹோட்டல்களிலும், மற்றொன்று திறந்த வெளி பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இந்த வருடம் பார்ட்டி கொண்டாடத்திற்காக அனுமதி வாங்க விண்ணப்பித்த ஹோட்டல்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. அதிக அளவு வரி விதித்திருப்பதால் பலரும் இந்த நியூஇயர் பார்ட்டிக்கான அனுமதியை வாங்கவில்லை என்று உழவர்கரை முனிசிபல் கமிசனர் எம். கந்தசாமி அறிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த வருடத்தில் ஷி கல் ரெஸ்டாரண்ட், பாரடைஸ் பார்கள் ஆகியவற்றியிலும் நியூ இயர் கொண்டாட்டங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 26ம் தேதியை இறுதி தேதியாக அறிவித்து புதுவை சுற்றுல்லாத்துறை வெளியிட்ட டெண்டர்களுக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்ட் போர்ட்டில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கும் பாதுகாப்பு காரணங்களால் கேள்விக்குறியாகியுள்ளது. ஹோட்டல் ப்ரிஸோ மட்டும் தான் இதுவரை விண்ணப்பம் அளித்ஹ்டுள்ளாது. ஐ.டி.டி.சி. ஹோட்டல் அசோக் பீச் ரெஸார்ட், நல்லா பீச் ரெஸார்ட், மற்றும் செய்ண்ட் ஜேம்ஸ் கோர்ட் பீச் ரெஸார்ட்கள் இதுவரையிலும் எந்த ப்ளான்களையும் அறிவிக்கவில்லை.
25% எண்டெர்டெய்ன்மெண்ட் டாக்ஸ் நுழைவுக்கட்டணத்தின் மீது போடப்பட்டுள்ளது. மேலும் செக்யூரிட்டி டெபாசிட் நுழைவு கட்டணத்தில் 25% ஆகும். மேலும் முனிசிபல் உரிமம் பெற ரூ. 5000 கட்டணம் செலுத்த வேண்டும். மது 'serving'-க்கு ரூ.10000 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் 28% ஜி.எஸ்.டி, சுங்க வரி, கூடுதல் சுங்க வரி என்று அரசு வசூலிக்கிறது. மேலும் ப்ரோகிராம், உணவு, மது, லைட்டிங்க், ஸ்டேஜ், ட்ரான்ஸ்போர்ட்டேசன் மற்றும் மேன்பவர் ஆகியவற்றை ஹோட்டல் நிர்வாகம் ரெடி செய்ய வேண்டும். இது மிகப்பெரும் செலவை இழுக்கும் என்று கருதுவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் நியூஇயர் பார்ட்டிக்கு நோ-நோ சொல்லியிருக்கின்றார்கள்.