2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் - முழு விவரம் இங்கே
TN Govt Holidays 2020 : அக்டோபர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆயுத பூஜையை முன்னிட்டும், 2ம் தேதி திங்கள்கிழமை விஜயதசமியை முன்னிட்டும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டும், விடுமுறை வழங்கப்படுகிறது
TN Govt Holidays 2020 : அக்டோபர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆயுத பூஜையை முன்னிட்டும், 2ம் தேதி திங்கள்கிழமை விஜயதசமியை முன்னிட்டும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டும், விடுமுறை வழங்கப்படுகிறது
2020 TN Government Holidays : 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
2020 அரசு விடுமுறை - பொங்கல்
இதன்படி 2020 ஆம் ஆண்டின் முதல் விடுமுறை தினம், ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டாகும். இது புதன்கிழமை வருகிறது. ஜனவரி 15ம் தேதி புதன்கிழமை பொங்கலை முன்னிட்டு விடுமுறை, 16ம் தேதி வியாழக்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 17ம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் திருநாளை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது.
Advertisment
Advertisements
2020 TN Government Holidays : 2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள்
பிப்ரவரி நோ லீவ்
ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம். ஜனவரி மாதம் இவ்வாறு அடுத்தடுத்து பல விடுமுறை தினங்கள் வந்த போதிலும், பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு அரசு விடுமுறை தினமும் கிடையாது.
2020 ஹாலிடே - தமிழ் புத்தாண்டு
மார்ச் 25ம் தேதி புதன்கிழமை, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு, என்பதால் விடுமுறை விடப்படுகிறது. இது புதன்கிழமை வருகிறது. ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும், 10ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டும், ஏப்ரல் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது.
ஜூன், ஜூலை மாதத்தில்...
மே மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை, மே தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படும். மே மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. இதை அடுத்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எந்த ஒரு அரசு விடுமுறை தினமும் வரவில்லை.
2020 TN Government Holidays : 2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள்
கொட்டிக் கொடுக்கும் ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை பக்ரீத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதி, சனிக்கிழமை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், ஆகஸ்ட் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மொகரம் முன்னிட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக வருகிறது, அக்டோபர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆயுத பூஜையை முன்னிட்டும், 2ம் தேதி திங்கள்கிழமை விஜயதசமியை முன்னிட்டும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டும், விடுமுறை வழங்கப்படுகிறது.
மொத்தம் 23 நாட்கள்
நவம்பர் 14ம் தேதி, சனிக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. டிசம்பர் 25ம் தேதி, வெள்ளிக்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது ஆக மொத்தம் 23 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news