scorecardresearch

19 ஒருங்கிணைப்பாளர்கள்… 32 துணைத் தலைவர்கள்! தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் புதிய பட்டியல்

Appointments in Tamil Nadu pradesh Congress Committee :

19 ஒருங்கிணைப்பாளர்கள்… 32 துணைத் தலைவர்கள்! தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் புதிய பட்டியல்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை அகில இந்திய  தேசிய காங்கிரஸ்  பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தார்.

கோபண்ணா, நாசே ராமச்சந்திரன், ராமசுகந்தன், இரா.செழியன், எஸ்.எம்.இதாயத்துல்லா, என். கந்தசாமி, டி. என். முருகானந்தம் உட்பட 32 பேர் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

மறைந்த கன்னியாகுமரி எம். பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இது தவிர, டி. செல்வம், அருள் அன்பரசு, என். சுந்தரம்,  கார்த்தி தங்கபாலு என மொத்தம்  57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.ஆர்.ராமசாமி தலைமையில் 6 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

கே.எஸ்.அழகிரி தலைமையில் 32 பேர் கொண்ட மாநில தேர்தல் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

திருநாவுக்கரசர் தலைமையில் தேர்தல் பரப்புரை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

கே.வி.தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட விளம்பரக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக ரூபி.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த நியமனம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சிவகங்கை காங்கிரஸ் எம். பி கார்த்சி சிதம்பரம், “இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது” என்று தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 2021 tn assembly election aicc appoints various office bearers in tamil nadu pradesh congress committee