/tamil-ie/media/media_files/uploads/2018/10/actor-sarathkumar.jpg)
பாரதிய ஜனதா கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது.
Sarath Kumar | Tamilnadu Bjp | Lok Sabha Election | 2024 மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில், சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது.
இது குறித்து சரத் குமார், “மீண்டும் நல்லாட்சி அமைந்திட, மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பாரத பிரதமராக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்” என அறிக்கையில் கூறியுள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு@narendramodi@AmitShah@MenonArvindBJP@Murugan_Mos@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@HRajaBJP#PMModi@sajeevpbjppic.twitter.com/QyA9c98pox
— R Sarath Kumar (@realsarathkumar) March 6, 2024
மேலும், “கூட்டணி பேசசுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், மற்ற விவரங்களை ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன்” என்றார்.
அண்ணாமலை வரவேற்பு
“நரேந்திர மோடியின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்க்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முன்வந்திருக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் குமாரை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்க்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்… https://t.co/2iCeRDYuwG
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 6, 2024
மேலும், “வரவு, தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என்பது உறுதி” எனவும் அவர் கூறியுள்ளார்.
நெல்லை தொகுதி ஒதுக்கப்படுமா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க நெல்லை தொகுதி யாருக்கு என்ற கேள்வி ஒலிக்க தொடங்கியது. இந்த நிலையில், “பாஜக கூட்டணியில் இத்தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
எனினும் சரத் குமார் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தார். இதனால் அவர் அதிமுக கூட்டணியில் இணையக் கூடும் என்ற பேச்சுகள் அடிபட்டன.
இந்த நிலையில் அவர் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதால், நெல்லை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.