அதிமுகவில் தொகுதி பங்கீடு , தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரச்சாரம் , விளம்பரம் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் பணிக் குழுக்களை அமைத்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தேர்தல் அறிக்கை குழுவினர் பிப்ரவரி 5 முதல் 10 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். 38 மாவட்டங்களை 9 மண்டங்களாக பிரித்து பயணம் மேற்கொள்கின்றனர்.
பிப்ரவரி 5ம் தேதி சென்னை, வெல்லூர், விழுப்புரம் மற்றும் சேலம் மண்டலத்தை பிப்ரவரி 6ம் தேதியும், தஞ்சாவூர், திருச்சி மண்டலத்தை பிப்ரவரி 7ம் தேதியும் பயணம் மேற்கொள்கின்றனர். கோவையை பிப்ரவரி 8 மற்றும் மதுரையை பிப்ரவரி 9ம் தேதியும், திருநெல்வேலியை பிப்ரவரி 10ம் தேதியும் பயணம் மேற்கொள்கின்றனர்.
கல்லூரி ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், தொழில் முனைவோர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், தனியார் வேலையில் இருப்பவர்கள் என்று எல்லா தரப்பு மக்களை சந்தித்தும் அவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
மூத்த தலைவர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயகுமார், சி.வி சண்முகம், செ.செம்மலை, ஓ.எஸ் மணியன், ஆர்.பி உதயகுமார் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளது.
Read In english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“