வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணிநேரத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(செப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மழை பெய்யும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.
இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணககிரி, திருச்சி, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1-5ம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“