ஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு... 2 நாளில் நாடு திரும்புவார்கள் என தகவல்

ஈரான் நாட்டில் சிக்கியிருந்த தமிழக மீனவர்கள் மீட்பு

ஈரான் நாட்டில் சிக்கியிருந்த தமிழக மீனவர்கள் மீட்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu fishermen in Iran தமிழக மீனவர்கள்

tamilnadu fishermen in Iran தமிழக மீனவர்கள்

ஈரான் நாட்டில் சிக்கித் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்னும் 2 நாட்களில் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் 3-ம் தேதி முதல் குழுக்களாக சென்னை வந்து சேர்வார்கள் எனவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டில் சிக்கியிருந்த தமிழக மீனவர்கள் மீட்பு தகவல்:

Advertisment

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டில் கடந்த 6 மாதங்களாக 3 விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு உரிய ஊதியத்தை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் படகு உரிமையாளர் ஏமாற்றி வந்தார். இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இது குறித்து தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்த மீனவர்கள், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவர்களை 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட இந்த தகவலால் மீனவர்களின் குடும்பத்தினர் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

Iran Sushma Swaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: