Advertisment

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Advertisment

நேற்றிகாலை வழக்கம் போல் ராமநாதபுரதம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட விசைப்படகில் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி மீனவர்கள் மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 22 மீனவர்களையும் விசாரணைக்கு யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் 3 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடிக்த்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment