/indian-express-tamil/media/media_files/Zq28Moiqpkru6Hqci10f.jpg)
தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப் படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த ஜூலை 20ம் தேதி ஒரு படகிலும் 23ம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கடந்த 05.08.2024 அன்று கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், செப் 3ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது .
மேலும் 10 பேருக்கு இம்மாதம் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டும் நீதிபதி அயோனா விமலரத்ன உத்தரவிட்டார். இதையடுத்து இன்று (செப் 9) கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 1,000க்கும் மேற்பட்ட தருவைகுளம் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி தருவைகுளம் கிராமத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு 250 விசைப்படகுகள், 350 நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுமார் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us