மதுரை வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் சென்னை அனுவ்ராத் எக்ஸ்பிரஸ்...

இந்த மூன்று ரயில்கள் தவிர மேலும் 19 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது...

22 trains extended service : ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில் பயணிகளுக்கு ஒரு இனிப்பான தகவலை வெளியிட்டுள்ளார். 22 ரயில் சேவைகளை நீட்டித்துள்ளது.

22 trains extended service – தமிழகத்தில் 3 ரயில்கள் :

விழுப்புரத்தில் இருந்து காரக்பூர் செல்லும் 22604/22603 ரயிலின் சேவை புருலியா வரை நீட்டிக்கபட்டிருக்கிறது. இந்த ரயில் ஹிஜ்லி, மித்நாபூர், பிஷ்ணுபூர், பன்கூரா, மற்றும் அத்ரா ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

அதே போல் பிக்னானேர் – சென்னை அனுவ்ராத் எக்ஸ்பிரஸ் ( ரயில் நம்பர் 22632/22631) மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மற்றும் கொடைரோடு வரை ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

சேலத்திலிருந்து – காட்பாடி வரை செல்லும் 66019/66020 ரயிலின் சேவை அரக்கோணம் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் முகுந்தராயபுரம், வாலஜா சாலை, சோலிங்கர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.  இது தவிர 19 ரயில்களின் சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரயில் பயணிகளின் கவனத்திற்கு… டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close