Nilavarasi Durairaj : மன்னார்குடி வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் நிலவரசி துரைராஜ். தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், விரும்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டார். 22 வயதான இவர் தற்போது இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த நிலவரசி “ நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னைமாநகராட்சி 136வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த கழக உடன்பிறப்புகள்,பொதுமக்கள், தாய்மார்கள்,தோழமைக் கட்சி நண்பர்கள்,அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கொள்கிறேன்” என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.
பி.காம் பட்டதாரியான அவர் நிலவரசி துரைராஜ் அவரின் தந்தை வழியில் திமுகவை பின்பற்றி வருகிறார். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 136வது வார்டில் இவர் பெற்ற வெற்றியை அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுக கட்சியும் கொண்டாடி வருகிறது. நிலவரசி துரைராஜ் இந்த தேர்தலில் 7222 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அறிவுச் செல்வி 5112 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த வார்டில் அதிமுகவைக் காட்டிலும் விஜய் மக்கள் இயக்கம் அதிக வாக்குகளைப் பெற்று இடம் இடத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொங்குவில் அ.தி.மு.க டோட்டல் டேமேஜ்: அசைன்மென்ட்-ஐ முடித்த செந்தில் பாலாஜி!
சென்னையிலும் வென்றது மன்னை… மன்னார்குடி வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சகோதரிக்கு வாழ்த்துகள் என்று எம்.எல்.ஏ.வும் திமுக ஐ.டி. விங்க் செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பலமுறை தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்து பதிவு செய்துள்ள நிலவரசி, ”அரசியலில் தனக்கு ரோல் மாடல் உதயநிதி ஸ்டாலின் அண்ணா தான்” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil