கல்லூரி இறுதி ஆண்டு தேர்வைத் தவிர அனைத்து அரியர் தேர்வுகளையும் முதல்வர் பழனிசாமி ரத்து செய்து உத்தரவிட்டதால், 23 அரியர்களை திருச்சி பொறியியல் மாணவர் சஞ்சய் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு ஒரே நாளில் பிரபலமாகியிருக்கிறார்.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளைத் தவிர, தவிர கல்லூரி மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளையும் ரத்து செய்ய முதலமைச்சர் எட்டபாடி பழனிசாமியின் உத்தரவிட்டார். இதனால், பல அரியர் தேர்வுகளை வைத்துள்ள பல மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், திருச்சியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் என் சஞ்சய் (21) தான் 23 பாடங்களில் அரியர் வைத்திருந்த நிலையில் முதல்வரின் உத்தரவால் தான் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் மாணவர் சஞ்ஜய் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்.
இது குறித்து திருச்சியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியில் படித்து வரும் என்.சஞ்சய் முதல்வரின் அறிவிப்பு குரித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “அரியர் ஆல் பாஸ் குறித்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரியில் என்ஜியரிங் படித்து வந்தேன், எடமலைப்பட்டி கிராப்பட்டிதான் என் ஊர்.. என் பெயர் சஞ்சய் நேரு.. 23 வயதாகிறது.. நான் மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு தேர்வில் 427 மார்க் எடுத்தேன்.. பிளஸ்-2வில் 905 மார்க் எடுத்தேன்.. என்ஜினீயரிங் பாடங்கள் எதுவுமே புரியவில்லை. மனப்பாடம் செய்தாலும் எதுவுமே எனக்கு ஏறல.
சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் மட்டும் இதை எளிதில் புரிந்து கொண்டனர்… இதனால் படிப்பில் எனக்கு சுத்தமா ஆர்வமே இல்லாமல் போய்விட்டது… பேசாமல் பாதியிலேயே நின்னுடலாமான்னுகூட யோசிச்சேன்.. ஆனால் எங்க வீட்டில் டிகிரி வேணும்னு சொல்லிட்டாங்க.
முன்னாடியெல்லாம் அரியர்களை விரும்புற நேரத்தில் எழுதலாம்.. ஆனால் இப்போ அப்படி கிடையாது.. முதல் வருஷம் அரியர் முடிச்சாதால்தான் 4-ம் வருஷத்துக்கு அனுப்பி வைப்போம்னு அண்ணா யூனிவர்சிட்டி சொல்லிவிட்டது.. எனக்கு மொத்தம் 23 அரியர்கள்.. அதனால வேற வழியில்லாமல் 23 அரியர் பாடங்களுக்கும் பீஸ் கட்டினேன்.
இந்த சமயத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் அரியரை எல்லாம் பாஸ் செய்து அறிவிச்சிட்டார்.. இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்துள்ளது.. அரியர் எழுதுவது ஏழை மாணவர்களுக்கு பொருளாதார சுமையை தருகிறது… முதலில் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 பீஸ் கட்டணும்.. தேர்வுக்கு பிறகு மறுமதிப்பீடு கேட்க ரூ.150 கட்டணும்.. பாஸ் ஆகும் மார்க் எடுத்திருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டி திரும்பவும் அனுப்ப ரூ.450 செலவழியும்.
ஆகையினால் இந்த ஆல்பாஸ் முடிவு என்னை போன்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.. எங்க கிளாஸில் 12 மாணவ -மாணவிகள் உள்ளனர்.. இவர்களில் ஒரு மாணவியை தவிர்த்து எல்லாருமே அரியர் வெச்சிருந்தோம்.. இப்போ ஆல் பாஸ் ஆகிவிட்டோம்.. கொரோனாவுக்கு மிக்க நன்றி” என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"