ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களையும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து விசைப்படைகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகும மீனவர்கள் மற்றும் பாம்பன் நாட்டுப்பாடகு மீனவர்கள் இன்று (நவம்பர் 12) ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“