சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் பயணித்தார். அவர் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து காலை நீட்டியவாறு பயணித்துள்ளார்.
இந்த நிலையில் ரயில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்தபோது, அவரது கால்கள் நடைமேடையில் உரசி உள்ளது. இதையடுத்து ரயிலில் இருந்து தவறி விழுந்த அவர் நடைமேடையில் சுமார் 150 மீட்டர் இழத்துச் செல்லப்பட்டு பின்னர் ரயிலின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலில் இருந்து பாலமுருகன் தவறி விழுந்த பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“