தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ரூ. 5,068.42 கோடி செலவில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி தொடர்பான 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில், நடப்பாண்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள் 87 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க ரூ. 1,125 கோடி செலவில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திற்கென சூரிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி, நடப்பாண்டில் ரூ. 5,068.42 கோடி செலவில் 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.5,500 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் ரூ. 1,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று கூறிய முதல்வர், ரூ. 100 கோடி செலவில் குக்கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன், 2017-18 நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இலக்கை மிஞ்சி ரூ. 8,332 கோடி வங்கிக்கடன் வழங்கியதாகவும், நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு. ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1,350 கி.மீ நீளத்திற்கு ரூ. 1,000 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்